இரக்கம் மிகுந்த கரத்திலே – Irakkam Miguntha karathile song lyrics
இரக்கம் மிகுந்த கரத்திலே – Irakkam Miguntha karathile song lyrics
இரக்கம் மிகுந்த கரத்திலே என்னை முழுதும் அர்ப்பணமே – 2
வாழ்வது என்னில் நீயாக வாழ்க்கை எல்லாம் உமக்காக
எல்லாம் தந்தேன் என்னைத் தந்தேன் – 2
1. குயவன் கையில் களிமண்ணாய் கொடுத்தேன் என்னை உன்னிடத்தில்
எடுத்து உமது விருப்பம் போல் வடிவம் கொடுத்து வனையுமே – 2
உனக்காய் வாழும் ஒரு கணம் அதுவே வாழ்வின் பேரின்பம்
நீயில்லாத வேறிடம் அனைத்தும் இருந்தும் ஏதின்பம்
என்னிறைவா அர்ப்பணமே என்னை முழுதும் ஆட்கொள்ளுமே
2. உமது அன்பு தீபமாய் எரிய என்னை எரித்திடும்
உமது உண்மை நாதமாய் ஒலிக்கக் குரலை வளர்த்திடும் – 2
எனது சிறிய விளக்கிலே எரியும் தீபம் நீயன்றோ
எனது சொல்லும் செயல்களும் உமது தீப ஒளியன்றோ
என்னிறைவா எரித்திடும் உமது ஒளியைப் பரப்பிடும்
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."