
உள்ளம் துள்ளிப் பாடும் – Ullam Thulli Paadum song lyrics
உள்ளம் துள்ளிப் பாடும் – Ullam Thulli Paadum song lyrics
உள்ளம் துள்ளிப் பாடும்
என் இயேசுவோடு வாழும்
காலங்கள் எல்லாமே
இன்பம் இன்பம்
நேற்றும் இன்றும் என்றும்
மாறிடாத தெய்வம்
இயேசு என்றே சொல்வேன்
என்றும் எங்கும்
நாளும் அவர் அன்பினில்
என் வாழ்க்கை இனிதாகிடும்
பாவம் கரைந்தோடிடும்
எனதாவும் புதிதாகிடும்
-உள்ளம் துள்ளிப் பாடும்
வெயிலானாலும் மழையானாலும்
என் நேசர் என்னோடு இருக்கையிலே
புயலானாலும் பசும்புல்லானாலும்
என்னோடு அவரும் வருகையிலே
நான் சோர்ந்து போக இடமுமில்லை
என் இயேசு என்னைக் கைவிடுவதில்லை (2)
-உள்ளம் துள்ளிப் பாடும்
பெலமும் அல்ல பராக்ரம் அல்ல
அவர் ஆவியாலே உயிர் வாழ்கிறேன்
சுகத்தினிலும் சுகவீனத்திலும்
அவர் கிருபையினாலே நிலைநிற்கின்றேன்
என் யாவும் அவரின் கரங்களிலே
என் வாழ்வில் என்றும் குறைவில்லையே (2)
-உள்ளம் துள்ளிப் பாடும்