காட்டும் நல் வகை காட்டும் – Kaattum Nal Vagai Kaattum

காட்டும் நல் வகை காட்டும் – Kaattum Nal Vagai Kaattum

காட்டும், நல் வகை காட்டும், ஐயரே; ஏழைப்பா விக்குமது
கருணை அருளைச் சூட்டும், ஐயரே.

அனுபல்லவி

நீட்டும் கரத்தைச் சூட்டும் கிருபை
நிறைந்த நின் அருள் சிறக்க சபையில்
நாட்டுவீர்; எனைத் தேற்றுவீர்; உமை
நம்பினேன், கிறிஸ்தம்பரா, என்பரா.

சரணங்கள்

1.கிருமியே, நீ திகையாதே, எனவும், நாம் எப்போதும் உந்தன்
கிட்டவே தரித்திருக்கிறோம், எனவும்
நெருக்கத்தில் நமைக் கூப்பிடும், எனவும்,-நாம் உன்னோடிருந்து
நேச மகிமை அருள் செய்வோம், எனவும்
வருத்தத்துடனே பாரம் சுமந்து
வந்தோர்களின் நிர்பந்தம் அகல
உரித்தாய் ஆறுதல் செய்வோம், எனவும்,
உரைத்த யாவையும் நினைத்துத் தேற்றும்;

2.தேடுங்கள், கண்டடைவீர்கள், எனவும், தட்டுங்கள், அப்பொழுது
திறந்திடப்படும் உங்களுக்கெனவும்,
நாடிப் பணிந்து கேளுங்கள் எனவும், அப்பொழுதுங்களுக்கு
நலமுடன் கொடுக்கப்படும், எனவும்,
சூடும் கிருபைத் திருவாய் மலர்ந்து
சொன்ன உமது நன் மொழிப்படிப்
பாடும் அடியேன் பலன் பெற நீர் என்
பங்கிலே தங்கும், விளங்கிய தெய்வமே காட்டு

3.பெருவானும் பூவும் ஒழிந்து போயினும்-என் திரு உரை ஒன்றும்
பிசகிடா தென்றீர், இது மெய்யே என்றும்
பருவதங்கள் நிலை விலகினும் மேடாக உயர்ந்த
பலத்த குன்றுகள் யாவும் சாயினும்
கிருபையும் சமாதானமும் நிறைந்த
கீர்த்தியன் எனதுடம்படிக்கையும்
ஒரு போதும் உனை விட்டிடாதென
உரைத்தவா, எனை நினைத்துத் தேற்றுமே

Kaattum Nal Vagai Kaattum song lyrics in English

Kaattum Nal Vagai Kaattum Yealaippa Vikkumathu
Karunai Arulai Soottum Aiyarae

Neettum Karaththai Soottum Kirubai
Niraintha Nin Arul Sirakka Sabaiyil
Naattuveer Enai Theattruveer Umai
Nambinean Kiristhamparaa Enbaraa

1.Kirumiyae Nee Thigaiyathae Enavum Naam Eppothum Unthan
Kittavae Tharithirukkirom Enavum
Nerukkaththil Namai koopidum Enavum Naam Unnodirunthu
Neasa Magimai Arul Seivom
Varuththudanae Paaram Sumanthu
Vanthorkalin Nirpantham Agala
Uriththaai Aaruthal Seivom Enavum
Uraitha Yaavaiyum Ninaithu Theattrum.

2.Theadungal Kandadaiveergal Enavum Thattungal Appoluthu
Thiranthidapadum Ungalukeanavum
Naadi Paninthu Kealungal Enavum Appoluthunkalukku
Nalamudan Kodukkapadum Enavum
soodum Kirubai Thiruvaai Malaenthu
Sonna Umathu Naan Mozhipadi
Paadum Adiyean Balan Pettra Neer En
Pangilae Thangum Vilangiya Deivamae Kaattu.

3.Peruvaanum Poovum Olinthu Poyinum En Thiru Urai Ontrum
Pisakida Thentreer Ithu Meiyae Entrum
Paruvathangal Nilai Vilaginum Meadaga Uyarntha
Balatha Kuntrugal Yaavum Saayinum
Kirubaiyum Samaathanamum Nirantha
Keerthiyan Enathudan Padikkaiyum
Oru Pothum Unai Vittidathena
Uraithavaa Enai Ninaithu Theattrumae.


Shop Now: Bible, songs & etc 


1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!


2. Subscribe to Our Official YouTube Channel


Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!


Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."


      About Us

      gray-alpaca-115533.hostingersite.com is part of the Christianmedias organization. We share Tamil Christian songs with lyrics and worship music in multiple languages. Our mission is to inspire prayer and devotion by connecting believers with powerful songs and the stories behind them.

      WorldTamilchristians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo