மணிப்பூரில் நடக்கும் கொடூர சம்பவங்கள் – manipur violence Shocking news
மணிப்பூரில் கூகி பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த இளம் பெண்கள் இரண்டு பேர் நிர்வாணமாக அழைத்துச் செல்லப்பட்டு, கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு உள்ள சம்பவம் இந்திய நாட்டில் இருக்கும் பெண்களுக்கு கோபத்தை வரவழைத்துள்ளது.
வீடியோவை பார்த்த ஒவ்வொருவருக்கும் கண்ணில் தென்பட்டது மனித மிருகங்கள் இந்த நிகழ்வு அரசியல் ஆக்கப்பட்டு விடுமோ என்பதைத் தாண்டி இன வேற்றுமை ஓங்கிக் கொண்டிருக்கிறதோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
மேலும் அதிர்ச்சி தரக்கூடிய தகவல் என்னவென்றால் சம்பவம் நடந்த இடத்தில் காவல் துறையினர் இருந்ததாக பாதிக்கப்பட்ட பெண் கூறியிருப்பது பேரதிர்ச்சியை கொடுத்துள்ளது.
இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் அழகு நிறைந்த மாநிலமாக பார்க்கப்படும் மணிப்பூர் இப்போது மனித தன்மையற்ற மிருக காட்சியகமாக தெரிகிறது. பாஜக தலைமையிலான ஆட்சி நடைபெற்று வரக்கூடிய நிலையில் அக்கட்சி அளித்த தேர்தல் வாக்குறுதியே கலவரத்தின் அடிப்படை காரணமாக அமைந்துவிட்டது.
மணிப்பூரில் இரண்டு இனக்குழுக்கள் வாழ்ந்து வருகின்றனர் ஒரு இனம் கூகி மற்றோன்று மெய்தேகி இதில் கூகி இனத்தவர் பழங்குடியினர் மெய்தேகிஇனத்தவர், பழங்குடியினர் அல்லாதவர்.
பாஜகவின் தேர்தல் வாக்குறுதியில் மெய்தேகி சமூக மக்களுக்கு பழங்குடி சமூகத்தினருக்கான அந்தஸ்து வழங்கப்படும் என்று கூறியிருந்தது இவர்கள் மொத்தம் 53 சதவீதத்தினர்.
கூகி மக்கள் காடுகளிலும் காடுகள் சார்ந்த சமவெளிப் பகுதிகளிலும் வாழ்ந்து வருகின்றனர். இந்த பகுதிகளில் இவர்களை தவிர வேறு யாரும் நிலங்களை வாங்கவோ விற்கவோ முடியாது.
அதை போல வேலை வாய்ப்பு உட்பட 31% இட ஒதுக்கிடும் இருக்கிறது.
இவர்களில் பெரும்பாலானோர் கிறிஸ்தவர்கள்,ஆனால் மெய்தேகி சமூகத்தினர் இந்துக்கள் எனவே தங்களையும் பழங்குடியினர் பிரிவில் சேர்க்க வேண்டும் என்று மெய்தேகி சமூகத்தினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.இப்படி சேர்த்தால் தங்களுது உரிமைகள் பறிபோய்விடும் என்று மக்கள் எதிர்த்து வருகின்றனர்.
இந்நிலையில் தேர்தல் நெருங்கிய காரணத்தால் மெய்தேகி மக்களை பழங்குடி சமூகத்தில் சேர்ப்பதாக பாஜக தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்திருந்தது, எதிர்பார்த்ததை போலவே பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று தேர்தலில் பாஜக வெற்றியும் பெற்றது, இந்த நிலையில் இந்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்று மெய்தேகி மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
இது நீதிமன்றம் வரை சென்ற நிலையில் நீதிமன்றமும் மெய்தேகி மக்களை
பழங்குடியினர் சமூகத்தில் சேர்ப்பது குறித்து மாநில அரசுக்கு வழிகாட்டியது அதுவரை அமைதி காத்த கூகி சமூக மக்கள் தங்கள் உரிமைகளுக்காக போராடத் தொடங்கினர்.
உடனே மெய்தேகி மக்களும் போராட்டத்தில் குதிக்க கலவரம் வெடித்தது,இந்த வன்முறையில் அரசின் அதிகாரப்பூர்வ கணக்கு 135 க்கும் அதிகமானோர் உயிரிழந்திருக்கின்றனர் .
பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர் அதேபோல 536 தீவைப்பு வழக்குகள் பதிவாகி இருக்கிறது வன்முறைகள் தொடர்பாக 5089 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 144 பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள், மாநிலத்தில் சுமார் 36,000 பாதுகாப்பு படை வீரர்கள் நிறுத்தப்பட்டு இருக்கின்றனர். 40 ஐபிஸ் அதிகாரிகள் மற்றும் 20 மருத்துவ குழுக்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருருக்கிறார்கள்.
இருந்தாலும் இப்போதுவரை மணிப்பூரில் அமைதி திரும்ப வில்லை, 300க்கும் மேற்பட்ட முகாம்களில் 60 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் தங்கி இருக்கின்றனர்.
இந்த நிலையில் இந்த விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலையிட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர், ஆனால் பிரதமர் இது குறித்து மௌனம் காத்தார்.
இந்நிலையில் மணிப்பூரில் மற்றொரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது மே 4ம் தேதி அன்று கூகி பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த பெண்கள் இருவரை வன்முறை கும்பல் ஒன்று நிர்வாணப்படுத்தி சாலையில் அழைத்துச் சென்று அருகே இருந்த வயல்வெளியில் வைத்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறது பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தையும் சகோதரனும் கொல்லப்பட்டு இருக்கிறார்கள்.
இந்த சம்பவம் மணிப்பூர் தலைநகரின் இம்பால் இருந்து 32 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு மாவட்டத்தில் தான் நடந்திருக்கிறது பாலியல் துன்புறுத்தல் தொடர்பான முதல் தகவல் அறிக்கை மே 18-ஆம் தேதி பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
தற்போது இது தொடர்பான வீடியோ சோசியல் மீடியாக்களில் வேகமாக பரவியும் வருகிறது, சம்பவம் குறித்து உரிய நடவடிக்கை எடுக்க பிரதமர் மோடி மணிப்பூர் விவகாரத்தில் தலையிட வேண்டும் என்றும் வலியுறுத்த தொடங்கி இருக்கிறார்கள், அதே போல இதில் ஈடுபட்டவர்களுக்கு அதிகபட்ச தண்டனை பெற்று தரப்படும் என்று மாநில முதலமைச்சர் பைரன் சிங்கம் கூறியிருக்கிறார்.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட பெண்ணில் ஒருவர் தனியார் இதழுக்கு பேட்டி அனைவரையும் வ்ருத்தம் அடைய செய்திருக்கிறது, அதில் எங்களை வன்முறை கும்பல் புதருக்கு வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றபோது அங்கிருந்த போலீஸ் ஜீப்பில் நான்கு போலீசார் அமர்ந்திருந்தனர் அவர்கள் எங்களை பார்த்தனர் ஆனால் எங்களுக்கு உதவவில்லை என்று கூறியிருக்கிறார்கள் பெண்களை நிர்வாணமாக்கி துன்புறுத்தி ஊர்வலமாக அழைத்துச் செல்லும் வீடியோ வெளியான பிறகு நாடு முழுவதும் கடும் கண்டனங்கள் வலுகின்றன.
இது குறித்து பிரதமர் மோடி மணிப்பூரில் நடந்த சம்பவத்தால் தனது இதயம் சோகத்தில் மூழ்கியுள்ளது என்று தெரிவித்திருக்கிறார் இந்த சம்பவம் வெட்கக்கேடானது நாடு அவமதிக்கப்பட்டு இருக்கிறது அனைத்து தாய்மார்களையும் சகோதரிகளையும் பாதுகாக்க நடவடிக்கை எடுக்குமாறு முதலமைச்சர்கள் கேட்டுக்கொள்கிறேன்.
குற்றவாளிகள் யாரும் விடுவிக்கப்பட மாட்டார்கள் சட்டம் அதன் கடமையை செய்யும் மணிப்பூரின் மகள்களுக்கு நடந்தது ஒருபோதும் மன்னிக்கப்படாது என்று கூறியிருக்கிறார்.
நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டதால் அவையும் ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது இந்த நிலையில் இது தொடர்பாக கடும் கண்டனம் தெரிவித்து இருக்கக்கூடிய உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டிருக்கிறது.
இந்த வழக்கை ஜூலை 28ம் தேதி வெள்ளிக்கிழமை உச்சநீதிமன்றம் விசாரிக்கிறது அறிக்கையும் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறது.இந்த சமூக ஆர்வலர்களும் சரி பொதுமக்களும் சரி தங்களுடைய கண்டனங்களை தங்கள் பாணியில் வெளிப்படுத்தி வருகிறார்கள்.
இந்தியாவை உருக்கி இருக்கக்கூடிய இந்த சம்பவம் அதிர்ச்சி அளிப்பதாக தான் இருக்கிறது இந்தியாவின் மாண்புக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலும் எதிர்க்கட்சிகளின் விமர்சனத்திற்கு மேலும் வலு சேர்ப்பதாகவே மணிப்பூர் கோர சம்பவம் நிகழ்ந்திருக்கிறது.
இது குறித்து அரசாங்கமும் உச்சநீதிமன்றமும் முறையான நடவடிக்கை எடுத்து குற்றவாளிகளுக்கு தக்க தண்டனை வாங்கிக் கொடுக்க வேண்டும் என்பதுதான் பொதுமக்களின் கருத்தாக இருக்கிறது.
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."