மாதா சுப்ரபாதம் – Madha Suprabatham
மாதா சுப்ரபாதம் – Madha Suprabatham
காலங்கள் யாவுமே காத்திடும் தாயே அன்னையே ஆரோக்கிய மாதாவே
உன்னடி பணிந்து உன்னையே வணங்கும் எங்களை காத்திட வந்துவிடு
பொன்னிற மேனியில் புன்னகைத் தவழ இன்முகம் காட்டிடும் மாதாவே
அனுதினம் உன்னையே வேண்டிடும் எம்மையே இனிதுடன் காத்திட வந்துவிடு
சத்திய மைந்தனை கருவினில் சுமந்து உலகினுக்கீந்த மாதாவே
உன் துணையன்றி வேறெமக்கில்லை அன்புடன் காத்திட வந்துவிடு
அலை கடலோரம் ஆலயம் கொண்ட அன்னையே புண்ணிய மாதாவே
அடைக்கலம் என்றே அடி பணிகின்றோம் அன்புடன் காத்திட வந்துவிடு
உலகின் உதயமே தயைமிகு தாயே கருணையின் வடிவே மாதாவே
கலங்கிடும் எங்கள் துயரினை நீக்க கனிவுடன் காத்திட வந்துவிடு
வேளை நகர் வாழ் அன்னையே மரியே சுடர்கின்ற ஒளியே மாதாவே
சோதனை தீர்ந்திட வேதனை நீங்கிட வேண்டினோம் உன்னையே வந்துவிடு
கன்னி மாமரியே கருணையின் வடிவே கற்கண்டு சுவையே மாதாவே
கண்கள் இரண்டுமே தேடுது உன்னையே கனிவுடன் அன்னையே வந்துவிடு
இன்முகம் காட்டியே துன்பங்கள் தீர்த்திடும் இறைவனின் தாயே மாதாவே
பாவிகள் எம்மையும் பாசமாய் அணைத்து வாழ்வினை நல்கிட வந்துவிடு
தரணியை என்றும் காத்திடும் தாயே தாய்மையின் வடிவே மாதாவே
தவறுகள் பலவும் செய்தவர் எம்மை மன்னித்து காத்திட வந்துவிடு
ஊழ்வினை நீக்கும் சத்திய வடிவே உண்மையின் சுடரே மாதாவே
உன்மத்தர் எம்மையும் உலகினில் காக்க அன்புடன் தாயாய் வந்துவிடு
ஈடில்லா தெய்வமே இயேசுவின் அன்னையே முடியா முதலே மாதாவே
பாசமும் நேசமும் பூமியில் செழித்திட பரிவுடன் அன்னையே வந்துவிடு
உத்தமர் இயேசுவை உதரத்தில் சுமந்த கன்னியே மரியே மாதாவே
இவ்வுலகெல்லாம் இன்பத்தில் நிலைத்திட அன்புடன் அன்னையே வந்துவிடு
அன்புடன் என்றும் ஜெபிப்பவர் நெஞ்சில் நிலைத்திடும் தாயே மாதாவே
நித்தியம் உலகில் சத்தியம் வாழவே சத்திய ஜோதியே வந்துவிடு
அன்பினுக் கென்றும் அடிமையாய் இருக்கும் அன்னையின் வடிவே மாதாவே
உன் துணையன்றி உலகமே இல்லை உண்மையின் வடிவே வந்துவிடு
துன்பம் என்றவர் துயரினைத் தீர்க்கும் தாய்மையின் வடிவே மாதாவே
பங்கம் தொலைந்திட பலர் நலம் பெற்றிட பரிவுடன் அன்னையே வந்துவிடு
உலகங்கள் யாவுமே ஒரு புன்னகையால் ஒளிபெற செய்திடும் மாதாவே
பொய் எனும் இருளில் மூழ்கிடும் உலகை கரை சேர்த்திடவே வந்துவிடு
நீலக்கடலில் வன்புயல் காற்றில் வணிகரை காத்திட்ட மாதாவே
வாடி நின்றவரை நின் அருளாலே உயர்வாய் செய்திட வந்துவிடு
வாழும் வரைக்கும் உன் துணையன்றி துணை ஒன்றும் இல்லை மாதாவே
கதி என்றவரை கரை சேர்த்திடவே தோணியாய் நீயும் வந்துவிடு
கண்ணொளியாலே இருளினை நீக்கி கருணையை பொழியும் மாதாவே
புன்னகையாலே புதியதோர் உலகம் செய்திட வேண்டும் வந்துவிடு
நன்மை தீமை இருவகை அறிந்து எங்களை காக்கும் மாதாவே
அன்னையே என்றவர் அருகினில் இருந்து துன்பங்கள் நீக்கிட வந்துவிடு
எங்கும் எதிலும் நிறைந்திடும் தாயே வேளாங்கண்ணி மாதாவே
ஆயுதம் இல்லா புதியதோர் உலகம் இங்கே வேண்டும் தந்துவிடு
வைக்கோல் புதரில் வைரத்தை ஈன்ற புண்ணிய வடிவே மாதாவே
மதங்கள் இல்லா மனித மனத்தை உலகினில் மீண்டும் தந்துவிடு
விண்மீன் நடுவே மதியாய் தோன்றும் மாணிக்க வடிவே மாதாவே
எல்லா உயிரும் தன்னுயிர் என்றே எண்ணும் கருணையை தந்துவிடு
எல்லா உயிருக்கும் ஓர் உயிரான அன்னையே மரியே மாதாவே
இருதயம் எங்கிலும் ஈரம் கசிந்திட புதிதாய் இருதயம் தந்துவிடு
தேவனின் தூதனை மகனாய் பெற்ற புண்ணிய வடிவே மாதாவே
பண்ணிய பாவங்கள் யாவுமே தீர்த்து பூமியை புதிதாய் மாற்றிவிடு
மழையாய் கருணை சிந்தும் வடிவே எங்களைக் காக்கும் மாதாவே
மாநிலம் எங்கும் மக்களின் பஞ்சம் இனிதாய் இன்றே தீர்த்துவிடு
திருவடி நிழலில் உலகினை காக்கும் சத்திய வடிவ மாதாவே
நித்தமும் இங்கே நல்லருள் ஓங்க அன்னையே மரியே காட்சி கொடு
தீமைகள் யாவுமே விழிகொண்டு எரிக்கும் வேளாங்கண்ணி மாதாவே
மனம் கொண்ட கவலைகள் சடுதியில் நீக்கி கனிவுடன் எமக்காய் காட்சி கொடு
மரணத்தை வெல்லும் அமுதத்தை பொழியும் பரமனின் தாயே மாதாவே காய்ந்திடும் மனதில் கருணை உண்டாக்கி மாநிலம் காக்க காட்சி கொடு
சினம் கொண்ட பேயின் சிரசினை மிதித்திட்ட உண்மையின் வடிவே மாதாவே மனம் கொண்ட துயரங்கள் சீக்கிரம் ஆறவே கனிவுடன் எமக்காய் காட்சி கொடு
16 புலன்களுள் பரிசிலாய் பிறந்த மங்கைய மலரே மாதாவே
ஆதரவின்றியே அலைந்திடும் எங்கள் துன்பங்கள் தீர்ந்திட காட்சி கொடு வின்னவர் மன்னவர் வியந்தே போற்றிடும் வித்தகத் தாயே மாதாவே
கதியின்றி அலையும் எங்களின் வேண்டுதல் கனிவுடன் கேட்டு காட்சி கொடு
நித்தமும் உலகம் வணங்கிடும் வடிவே சத்திய பொருளே மாதாவே
புனிதத்தின் பாதையில் நாங்களும் தொடர்ந்திட பரிவுடன் எமக்கு காட்சி கொடு கடவுளின் கருணையை கரத்தினில் சுமக்கும் கனிவுள்ளம் கொண்ட மாதாவே இரந்திடும் அடியவர் எம் குலம் செழித்திட கனிவுடன் எமக்கு காட்சி கொடு
அபயம் என்றவர் இரு கரம் பிடித்து கரை சேர்த்தருளும் மாதாவே
பாவக்கடலில் மூழ்கிடும் எங்களை பரிவுடனே கரை சேர்த்துவிடு
நம்பினோர் நலம் பெற நலமுடன் கைத் தரும் நம்பிக்கை ஒளியே மாதாவே
வம்பும் வழக்கும் இல்லை என்றொழிய பரிவுடன் எமக்காய் காட்சி கொடு
விண்ணக அமுதென விளங்கிடும் புனிதமே விந்தைகள் புரிந்திடும் மாதாவே இதயங்கள் எல்லாம் புன்னகை பூக்க கனிவுடன் எமக்காய் காட்சி கொடு
குழந்தை இயேசுவை கைகளில் சுமந்த கருணைக்கடலே மாதாவே
பாவங்கள் போக்கி நல்லருள் தந்து பூமியில் புதிதாய் வாழ்வு கொடு
வேளாங்கண்ணியில் வலமாய் வந்து வணங்கியே நின்றோம் மாதாவே
இகபரம் இரண்டும் சுகமாய் கழியும் வழியினை இங்கே கண்டுவிட்டோம் வேளாங்கண்ணியை ஒரு முறை வணங்க தவம் என்ன செய்தோம் மாதாவே பிறவியின் பயனை என்னவென்று இங்கே உன்னால் தெரிந்தோம் மாதாவே என்றும் உன்னை வணங்குவதல்லால் பணி ஒன்றும் இல்லை மாதாவே
வருவோம் வருவோம் தினமும் வருவோம் என்றும் உன்னை வணங்கிடுவோம் என்றும் உன்னை வணங்குவதல்லால் பணி ஒன்றும் இல்லை மாதாவே
Madha Songs Tamil Christian songs Catholic Songs Jesus song
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."