Athikalaiyil Thianm Theadinaal Tamil Christian Song lyrics – அதிகாலையில்
Athikalaiyil Thianm Theadinaal Tamil Christian Song lyrics – அதிகாலையில் Pr-Nathanael Donald Gana Anthony
அதிகாலையில் தினம் தேடினால்
உம்மை கண்டடைவார்கள் தேவா
ஆராதனையில் துதி பாடினால்
சுகம் அடைந்திடுவார்கள் தேவா
துதிக்குப் பாத்திரரே தூயாவியே x 2
ஆராதிக்கும் தேவன் இயேசு ஒருவரே x 2
அதிகாலையில் தினம் தேடினால்
உம்மை கண்டடைவார்கள் தேவா
இரவொன்று வந்து பகலென விடிவது
இறைவா உம் அற்புதமே
உறங்கிடும் மனிதர்கள் மறுநாள் விழிப்பது
தேவா உம் சித்தமே
இருளினை நீக்கும் வெளிச்சமும் நீரே
இணையில்லா பேரொளியே
உம் பாசத்தை/இரக்கத்தை தேடி விழைந்திடுவோர்க்கு
குறைவில்லா உம் கிருபையே
கர்த்தரை ருசித்து பார்ப்பவர்க்கெல்லாம்
கசப்பும் இனிப்பாகுமே
கர்த்தரின் மேலே பிரியமாய் இருந்தால்
கவலைகள் பறந்தோடுமே
காலமே எழுந்து ஞானமாய் ஜெபித்தால்
கேட்பது ஜெயமாகுமே
வாழ்நாள் முழுவதும் வேதத்தை வாசித்தால்
வல்லமை உனை சூழுமே
நித்திய ஜிவ வழியினிலே நீ நடந்திட வகைதேடு
சத்திய வேத வார்த்தையை கேட்டு
சாட்சியாய் நடமாடு
நிம்மதி தந்திடும் நீதியின் தேவனின்
அன்பினில் உறவாடு
நிரந்தர சொந்தம் இயேசுவை நாடி
நன்மையால் முடிசூடு – நீ
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."