தேவ வசனத்தை வாசிப்பதும் தியானிப்பதும் – Deva Vasanaththai Vaasippathum Thiyanippathum
தேவ வசனத்தை வாசிப்பதும் தியானிப்பதும் – Deva Vasanaththai Vaasippathum Thiyanippathum
Reading and meditating on God’s Word
ஜெபம் ஒரு சுவாசமாக இருக்கும்போது தேவ வசனம் ஆவிக்குரிய குழந்தைக்கு உணவாக இருக்கிறது. கலங்கமில்லாத பாலைப் போலக் காணப்படும் தேவ வசனத்தை உட்கொள்வதினால் நாம் வளர்ச்சியடைய முடியும் (1 பேதுரு 2:1,2). தேவ வசனம் உணவு மாத்திரமல்ல, இது நம் வெளிச்சமாகவும் இருக்கிறது. “உம்முடைய வசனம் என் கால்களுக்குத் தீபமும், என் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது” (சங். 119:105). நம்மை சுத்திகரிப்பதற்கும், தேவ வசனத்திற்கு வல்லமை இருக்கிறது. “நான் உங்களுக்குச் சொன்ன உபதேசத்தினாலே நீங்கள் இப்பொழுதே சுத்தமாயிருக்கிறீர்கள்” (யோவான் 15:3). பிசாசிற்கு எதிராக போராடுவதற்கு இது நமக்கு ஆவியானவரின் பட்டயமாக இருக்கிறது (எபே. 6:17). எழுதப்பட்டுள்ள தேவனுடைய வசனத்தின் மூலமாக நாம் தேவனுடைய சித்தத்தைப் புரிந்து கொள்ள முடியும். சபையின் போதனைகள் மற்றும் சட்டதிட்டங்கள் எழுதப்பட்டுள்ள தேவ வசனத்தின் அடிப்படையிலுள்ளவைகள்; அல்லாமல் பாரம்பரியமோ சரித்திரமே அடிப்படையானவைகள் அல்ல. பரிசுத்த ஆவியானவரின் ஏவுதலின் மூலமாகத் தான் வேதத்திலுள்ள சத்தியங்களை நாம் புரிந்து கொள்கிறோம். ”வேத வாக்கியங்களெல்லாம் தேவ ஆவியானவரால் அருளப்பட்டிருக்கிறது; தேவனுடைய மனுஷன் தேறினவனாகவும், எந்த நற்கிரியையுஞ் செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படியாக, அவைகள் உபதேசத்துக்கும், கடிந்து கொள்ளுதலுக்கும், சீர்திருத்த முள்ளவைகளாயிருக்கிறது.” (2 தீமோ. 3:16,17). நாம் வேத வசனங்களை வாசிப்பது மட்டுமல்ல. அவைகளை தியானிக்கவும் வேண்டும் (சங். 1:3). தியானம் என்பது உணவை அசைபோடுவது போலாகும்.
அர்ப்பணம்:
ஒரு விசுவாசி தன்னையும், தனக்கு சொந்தமான அனைத்தையும் தேவ மகிமைக்காக அர்ப்பணிக்க வேண்டும் (ரோமர் 12:1). ஆவி, சரீரம், சொத்து, நேரம் மற்றும் எல்லாம் இதில் உட்படும். நம் சரீரம் தேவனுடைய ஆலயமாக இருக்கிறது; ஆகவே, நம் சரீரத்தினால் தேவனை மகிமைப் படுத்த வேண்டும். நமக்குள்ளதொன்றுக்கும் நாம் சொந்தக்காரர்கள் அல்ல. வெறும் உக்கிராணக்காரர்கள் மட்டும்தான். தேவ ஊழியத்திற்கும் தேவ ஊழியர்களுடைய தேவைகளை சந்திப்பதற்கும் நாம் நம் பணத்தின் ஒரு பகுதியை செலவழிக்க வேண்டும். உபசரிப்பதும் நம் கடமையாக இருக்க வேண்டும் (ரோமர் 12:13; எபி. 13:1; அப். 16:15). நம் வாழ்க்கை மற்றவர்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும். இல்லையென்றால், ஒருவரும் நம் வார்த்தைகளை ஏற்றுக் கொள்ளமாட்டர்கள். சுவிசேஷம் பரப்புவதில் நாம் ஒரு தடையாக மாறுவோம்.
- Christmas Bible Verses and Their Significance
- Psalm 91 – A Source of Strength and Comfort | Deeply Moving Bible Verses for Reflection
- Come for All Things Are Now Ready: A Biblical Invitation to Abundance
- Motivational Bible Verses for Inspired Living
- Come For All Things Are Now Ready
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."
Tags: chinese christian songschristian songchristian song in tamilchristian songs downloadChristian songs in tamilchristian songs mp3 free downloadchristian songs tamilChristianitydownloadHoly Spiritjapanese christian songsjcbjesus songs in tamiljohn jebaraj songs downloadkorean christian songskorean christmas songsNewnew christian songs tamilRosarySongTamil Christian Songtamil christian songs downloadTamil christian songs lyricstamil christian songs lyrics in englishtamil Christian songs mp3Tamil languagewhatsapp video