En nesar yesuvin mel Saarnthae Song lyrics – என் நேசர் இயேசுவின் மேல்
En nesar yesuvin mel Saarnthae Song lyrics – என் நேசர் இயேசுவின் மேல்
என் நேசர் இயேசுவின் மேல் சார்ந்தே
துன்ப வனாந்தரத்தில் நடந்திட
இன்ப நல் வாழ்வடைந்தேன் – 2
- லீலி புஷ்பம் சாரோனின் ரோஜா
பாலிலும் வெண்மை தூய பிதா
பூரண ரூப சௌந்தர்யமே
பேர் சிறந்த இறைவா - கன்னியர்கள் நேசிக்கும் தேவா
கர்த்தரின் நாமம் பரிமளமே
இயேசுவின் பின்னே ஓடி வந்தோம்
என்னையும் இழுத்துக் கொண்டார் - நேசக்கொடி மேல் பறந்தோங்க
நேசர் பிரசன்னம் வந்திறங்க
கிச்சிலி மரத்தின் கீழ் அடைந்தேன்
கர்த்தரின் ஆறுதலே - தென்றலே வா வாடையே எழும்பு
தூதாயீம் நற்கனி தூயருக்கே
வேலி அடைத்த தோட்டமிதே
வந்திங்கு உலாவுகின்றார் - நாட்டினிலே பூங்கனி காலம்
காட்டுப்புறாவின் பாட்டொலிக்கும்
கன்மலை சிகரம் என் மறைவே
இந்நேரமே அழைத்தார் - நித்திரையே செய்திடும் ராவில்
நித்தம் என் ஆத்மா நல் விழிப்பே
என் கதவருகே நின்றழைத்த
இயேசுவை நேசிக்கிறேன் - நேசத் தழல் இயேசுவின் அன்பே
நேசம் மரணம் போல் வலிதே
வெள்ளங்கள் திரண்ட தண்ணீர்களால்
உள்ளம் அணைந்திடாதே - தூய ஸ்தம்பம் போலவே எழும்பி
தேவ குமாரன் வந்திடுவார்
அம்மினதாபின் இரதம் போல
அன்று பறந்து செல்வேன் – என் நேசர் ஏசுவின் மேல்
En Nesar Yesuvin mel saarnthu
Sis. சாராள் நவரோஜி
R-Disco T-120 D 2/4
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."