En ullam kavarum song lyrics – என் உள்ளம் கவரும்
En ullam kavarum song lyrics – என் உள்ளம் கவரும்
என் உள்ளங் கவரும்,-நீர் மரித்த
இன்பக் குருசண்டை இன்னும் நெருங்கிட.
அனுபல்லவி
என் பாவம் போக்கவே ஈட்டியால் குத்துண்டு
இரத்தம், தண்ணீர் வழிந்தோடும் விலாவண்டை. – என்
சரணங்கள்
- உந்தன் மகா இன்ப சத்தம் நான் கேட்டவன்,
உமதாச்சரிய அன்பை உணர்ந்தவன்,
எந்தையே, நானும்மைச் சேர்ந்தவனாயினும்,
இன்னும் நெருங்கி நான் உம்மண்டை சேர்ந்திட. – என் - சுத்தக் கிருபையின் வல்லமையால் என்னை
முத்திரியும் உமக்கூழியம் செய்திட,
அத்தனே, உம்மில் நல் நம்பிக்கையாய் உந்தன்
சித்தமே என் சித்தமாகப் பிழைத்திட. – என் - உந்தனடிதனில் உறைந்து தனித்து
ஓர் மணி நேரம் கழிப்பதே பாக்கியம்;
என் தேவனே, அதி நேசமாய் உம்முடன்
இன்ப சம்பாஷணை செய்வதே ஆனந்தம். – என் - அம்பரா, மரண ஆழி தாண்டும் வரை
அறிய முடியா அன்பின் ஆழம் உண்டு;
என் பரனே, உந்தன் அன்பின் ஆழத்தை நான்
இம்மையில் கூடியமட்டும் அறிந்திட. – என்
- 1 2 3 4 அல்லேலுயா – 1 2 3 4 Alleluya
- 10 Paisavuku song lyrics – 10 பைசாவுக்கும்
- 8 languages sing As the Deer Together A worship in Heaven
- Aa Mesiyavae Vaarum Lyrics – ஆ மேசியாவே வாரும்
- Aa Inba Kaala Mallo Lyrics – ஆ இன்ப கால மல்லோ
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."