kartharai thuthi saeyithu – கர்த்தரைத் துதி செய்து
kartharai thuthi saeyithu – கர்த்தரைத் துதி செய்து
கர்த்தரைத் துதி செய்து களிகூர்ந்திடுவேன்
அற்புதரை இன்று கண்டு ஆர்ப்பரித்திடுவேன்
1. இயேசுவின் பாதத்தில் பரவசம் காண்கின்றேன்
இன்னல்கள் மறந்து இனிமை பெற்றிட
காலமும் கடைசி ஆகிடுதே ……. இதோ
கர்த்தர் வரும் நாளும் நெருங்கிடுதே – கர்த்தரை
2. புதிய பாதையில் புதுமையைக் காண்கிறேன்
புதிய வருடத்தில் வல்லமை பெற்றிட
பூவைப் போல் மலரும் மகிமை நாட்களிலே
புனிதனைப் புகழ்ந்து நான் மகிழ்ந்திடுவேன் – கர்த்தரை
3. மாய உலகத்தில் வெறுமையைக் காண்கிறேன்
மாட்சிமை இயேசுவின் மகிமை பெற்றிட
சத்திய பாதையில் நின்று ஓடிடுவேன்
சந்தோஷம் பொங்கிட சந்திப்பேன் இயேசுவை – கர்த்தரை
4. இனிய இரட்சிப்பில் இயேசுவைக் காண்கிறேன்
இன்பம் பொங்கிடும் சேவை பெற்றிட
இரட்சகர் கரங்களில் தாங்கிடுவார்… நான்
இன்முகத்தோடே பறந்திடுவேன் – கர்த்தரை
5. சீயோனின் சிகரச் செழிப்பை காண்கிறேன்
சிருடன் வந்திடும் சிறப்பைப் பெற்றிட
வாஞ்சையில் பெருகிடும் வெகுமதி வந்திடும்
வற்றாத ஜீவ வாழ்வடைந்திடுவேன் – கர்த்தரை
6. ஆத்தும நேசரை ஆவியில் காண்கிறேன்
ஆவியின் மழையை நிறைவாய் பெற்றிட
லீலியும் மலர்ந்திடும் நேசரும் வந்திடுவார்
மகிமையில் மறுரூபம் தரித்திடுவேன் – கர்த்தரை
- அல்லேலூயா அல்லேலூயா என் ஆத்துமாவே – Alleluya Alleluya En Aathumavae Kartharai
- வழியை காண்கிறேன் நல்ல – Vazhiyai Kaankireen Nalla Lyrics
- இரட்டிப்பான நன்மைகள் தந்திட – Rettippaana Nanmaigal Thanthida
- Thuthi Thuthi Yesuvai Thuthi – துதி துதி இயேசுவைத் துதி
- Thuthi Thuthi En Manamae – துதி துதி என் மனமே
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."