மானுவேல் தொண்டரே ஆர்ப்பரித்து – Manuveal Thondarae Aarparithu
மானுவேல் தொண்டரே ஆர்ப்பரித்து – Manuveal Thondarae Aarparithu
பல்லவி
மானுவேல் தொண்டரே!-ஆர்ப்பரித்து
மகிழ்ந்து பூரிப்போம்.
அனுபல்லவி
மானிலமீது சமாதானமா மென்ற
வானவர் வாழ்த் துதவறா தென நம்பும்,
நானிலமெங்கும் சகோதர ஐக்கியம்
நண்ணும் பகலருணோதயம் ஆகுதே:
நாடுவோம்,-அதைத் தேடுவோம்,-இனி
நாமுமுயற்சி கையாடுவோம், பாடுவோம். – மானு
சரணங்கள்
1. தீர்க்க ருரைப்படியே-உலகெங்கும்
தீங்கிலாக் காலம் வரும்:
தாக்கும் படைக்கலங்கல்-கிருஷிகச்
சாதனமாகி விடும்:
மாக்க ளெலாமொரே தந்தையின் மக்களாய்,
மன்னன் யேசுவுக்கு ளொன்றான தோழராய்,
வாக்குவாதங்கள், வழக்குகள், யுத்தங்கள்
நீக்கி யிணக்கம் பொறுமை நற்குணங்கள்
நிலைத்து,-அன்பு-வளர்த்துக்,-கரங்
கொடுத்து,-உற வடுத்துமதிப்பர். – மானு
2. போன காலங்களிலே-நடந்திட்ட
பொல்லாங்கும் பாடுகளும்,
ஈனத் துரோகங்களும்,-விளைவித்த
ஈங்கிசைபோதும் இனி
வானபரனின் மலரடிக் கண்ணுற்று,
வல்ல பரிசுத்த அன்பினாவி பெற்று,
மற்றுமவர் செய்கை மாதிரி நாம் கற்று,
மாட்சியாய்,-அவர்-சாட்சியாய்,-இந்த
மண்ணிலத்தார் ஒத்து வாழச் செபித்துமே. – மானு
3. சர்வ ஜனநேசம்-நிறைவுறத்
தாமதமானாலும்,
கர்வம் பொறாமை பகை-தடை செய்யக்
காலம் நீடித்தாலும்,
அருள் நம்பிக்கை கொண்டற்பமெனு நம்மால்
ஆனதைச் செய்குவோம் முன்தூதர் போலவே
இருளகல விடிவெள்ளி தோணுது;
எங்கும் நடுப்பகல் மங்களநாள் வரும்
யேசுவே,-இக-மாசுடர்-அவர்
நேசமே,-புவித்-தோஷமகற்றிடும். – மானு
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."