Tamil Christian – அந்தோணியார் மன்றாட்டு மாலை

Tamil Christian – அந்தோணியார் மன்றாட்டு மாலை

புனித அந்தோனியாரிடம் செவ்வாய்கிழமை தோறும் சொல்லும் மூன்று மன்றாட்டு ஜெபம்:

இப்புண்ணிய ஷேத்திரத்தில் மாட்சிமை தங்கிய மேலான
சிம்மாசனத்தில் கிருபாசனங்கொண்டு
எழுந்தருளியிருக்கிற புனித அந்தோனியாரே !
பரிசுத்தத்தனம்விளங்கும் லீலியே !
விலைமதிக்கப்படாத மாணிக்கமே !
பரலோக பூலோக காவலரே !
கஸ்தி துன்பப்படுகிறவர்களுக்குப் பரம சஞ்சீவியானவரே !
பாவிகளின் தஞ்சமே !

உமது இன்பமான சந்நிதானம் தேடி வந்தோம்.
உமது திருமுக மண்டலத்தை
அண்ணாந்து பார்த்து உம்மைக் கெஞ்சி மன்றாடுகிறோம்.
மகா சிரவணம் பொருந்திய புனித அந்தோனியாரே !
சூரத்தனமுள்ள மேய்ப்பரே !
பசாசுகளை மிரட்டி ஓட்டுபவரே !
திருச்சபையின் கருணையின் கண்ணாடியானவரே !
இவ்உலகில் எங்கள் ஆதரவும் நீரல்லவோ!
எங்கள் தஞ்சமும் நீரல்லவோ !
எங்கள் சந்தோஷமும், நம்பிக்கையும்,
பாக்கியமும் நீரல்லவோ !

நீர் எங்கள் ஞானத்தந்தை என்பதை எங்களுக்குக் காண்பியும்.
பிள்ளைகள் செய்த குற்றங்களை தாய் தந்தையர்கள் பாராட்டுவார்களோ,
உம்மைத் தேடிவந்த நிர்பாக்கியர்பேரில் தயவாயிரும்.
அழுகிறவர்களை அரவணையும் அல்லல்படுகிறவர்களுக்கு ஆறுதலாகவாரும்.

நீர் இரங்காவிட்டால் எங்களுக்கு வேறு யார் இரங்குவார்?
நீர் ஆதரியாவிட்டால் எங்களை வேறு யார்ஆதரிப்பார்?
நீர் நினையாவிட்டால் எங்களை வேறு யார் நினைப்பார்?
நீர் உதவாவிட்டால் எங்களுக்கு வேறு யார் உதவுவார்?

தஞ்சமென்று ஓடிவந்த அடியோர்கள் பெயரில் தயவாயிரும்.
பரிசுத்த வெண்மையின் தூயதான தயாபரமே !
தயைக்கடலே !
தவிப்பவர்களுக்குத் தடாகமே !
தனித்தவருக்குத் தஞ்சமே !
உமது இன்பமான சன்னிதானம் தேடிவந்தோம்.
ஆறு, காடு, கடல்களைக் கடந்து ஓடிவந்தோம்.
துன்பம், பிணி, வருமை முதலிய கேடுகளினாலே வாடி நொந்தோம்.
எங்கள் நம்பிக்கை வீண்போகுமோ?
எங்கள் மன்றாட்டு மறுக்கப்படுமோ?
எங்கள் யாத்திரைகள் பயன் அற்றதாய்ப் போகுமோ?
எங்கள் அழுகைக் கண்ணீர் உம்முடைய
இதயத்தை உருக்காது போகுமோ?
அப்படி ஆகுமோ ஐயா, எங்களின் அன்பான தகப்பனே!
எங்களை முழுவதும் ஒப்புக்கோடுக்கிறோம்.
எங்களைக்கையேற்றுக்கொண்டு ஆசீர்வதித்தருளும் – ஆமென்

Anthoniyar mandrattu malai | Punitha anthoniyar mandrattu malai | st antony mandrattu malai | paduva nagaraye

தூய அந்தோனியார் மன்றாட்டு மாலை

ஆண்டவரே இரக்கமாயிரும்
கிறிஸ்துவே இரக்கமாயிரும்
ஆண்டவரே இரக்கமாயிரும்
கிறிஸ்துவே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்
கிறிஸ்துவே எங்கள் மன்றாட்டை நன்றாய்க் கேட்டருளும்
விண்ணகத்திலிருக்கிற தந்தையாம் இறைவா
எங்கள் மேல் இரக்கமாயிரும்
உலகத்தை மீட்ட சுதனாகிய இறைவா
தூய ஆவியாகிய இறைவா
தூய தமதிரித்துவமாயிருக்ககிற ஒரே இறைவா
சென்மப் பாவமில்லாமல் உற்பவித்த தூய மரியாயே
கன்னியரில் உத்தம கன்னிகையே
பதுவைப் பதியரான தூய அந்தோனியாரே
பரத்தின் சீர்மிகு பெட்டகமான தூய அந்தோனியாரே
தூய்மையில் லீலி மலரான தூய அந்தோனியாரே
தவ வலிமை மிக்க தூய அந்தோனியாரே
தருமத்தை விரும்பிச் செய்து வந்த தூய அந்தோனியாரே
திருச்சிலுவையை மிகவும் நேசித்தவரான தூய அந்தோனியாரே
தரும நெறியில் மாறா மனத்தினை உடைய தூய அந்தோனியாரே
சிற்றின்ப ஆசையினை வென்றவரான தூய அந்தோனியாரே
போர்ச்சுக்கல் நாட்டின் நவ விண்மீனான தூய அந்தோனியாரே
நற்செய்தியை ஊக்கமுடன் பிரசங்கித்த தூய அந்தோனியாரே
இறைவனின் திருவாக்கில் குரல் ஒலியான தூய அந்தோனியாரே
தூய ஆவியானவரின் படிப்பினைகளை விரும்பியவரான தூய அந்தோனியாரே
விசுவாசமில்லாதவர்களுக்கு வாய்மையாய் உபதேசம் செய்கிறவரான தூய அந்தோனியாரே
பசாசுகளை நடுநடுங்கச் செய்கிறவரான தூய அந்தோனியாரே
புண்ணியவான்களுக்கு நிறைவான படிப்பினையான தூய அந்தோனியாரே
மீனோரென்கிற துறவிகளுக்குப் படிப்பினையான தூய அந்தோனியாரே
அப்போஸ்தலர்களின் கொழுந்தான தூய அந்தோனியாரே
பாவிகளுக்கு வெளிச்சம் தருகிறவரான தூய அந்தோனியாரே
ஆச்சரியங்களைச் செய்கிறவரான தூய அந்தோனியாரே
வழிதவறிப் போவோர்க்குத் துணையான தூய அந்தோனியாரே
சலிப்புள்ளவர்களுக்கு ஆறுதல் தரும் தூய அந்தோனியாரே
குற்றமற்ற மக்களின் ஆறுதலும் பாதுகாவலுமான தூய அந்தோனியாரே
ஊமைகளைப் பேசச்செய்கிறவரான தூய அந்தோனியாரே
உண்மையைப் போதிக்கும் உபதேசியான தூய அந்தோனியாரே
பசாசுகளை மிரட்டி ஓட்டுகிறவரான தூய அந்தோனியாரே
அடிமைப்பட்டவர்களை மீட்கிறவரான தூய அந்தோனியாரே
பிணியாளர்களைக் குணமாக்குகிறவரான தூய அந்தோனியாரே
மரணமடைந்தோர்க்கு இறைவன் உதவியால் உயிர்கொடுத்தவரான தூய அந்தோனியாரே
பிறவிக் குருடருக்குப் பார்வை அளித்த தூய அந்தோனியாரே
காணாமற் போனவைகளைக் கண்டடையச் செய்கிறவரான தூய அந்தோனியாரே
இழந்துபோன பொருட்களைக் கண்டடையச் செய்கிறவரான தூய அந்தோனியாரே
வழக்காளிகளுடய உண்மையைப் பாதுகாக்கிறவரான தூய அந்தோனியாரே
பரத்திற்கு சுதந்திரவாளியான தூய அந்தோனியாரே
தரித்திரருக்கு இரத்தினமான தூய அந்தோனியாரே
கடலில் மீன்களுக்கு உபதேசித்தவரான தூய அந்தோனியாரே
விஷஉணவு அருந்திய தூய அந்தோனியாரே
அப்போஸ்தலர்களின் குறைவற்ற தூய்மையை நேசித்தவரான தூய அந்தோனியாரே
புண்ணியமென்கிற ஞான வேளாண்மையைப் பல நாடுகளில் விளைவித்தவரான தூய அந்தோனியாரே
உலகமென்கிற அபத்தத்தை விட்டகன்ற தூய அந்தோனியாரே
கடலில் தத்தளித்த வீரர்களை மீட்ட தூய அந்தோனியாரே
உம்மை வேண்டுவோரின் அன்பரான தூய அந்தோனியாரே
எண்ணிறந்த ஆன்மாக்களை பரத்திற் சேர்த்த தூய அந்தோனியாரே
நன்னாக்கு அழியாத நற்றவரான தூய அந்தோனியாரே
பிரான்சிஸ் அசியாரின் சபை அரணான தூய அந்தோனியாரே
சிறுகுழந்தை வடிவில் வந்த தேவபாலனைத் தாங்கிய தூய அந்தோனியாரே
நீர் இறந்ததை சிறு குழந்தை வழியாக தெருக்களில் இறைவனால் அறிவிக்கப்பட்ட பேறுபெற்றவரான தூய அந்தோனியாரே
இறந்த ஓர் ஆண்டிற்குள் பீடத்தின் மகிமைக்கு உயர்த்தப்பட்ட தூய அந்தோனியாரே
உலகத்தின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே-3
எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும்
எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்
எங்களைத் தயை செய்து மீட்டருளும்
மன்றாடுவோமாக
தூய அந்தோனியாரே, வீரமிகும் ஆயரே, துன்புறுவோருக்கு மகிழ்வு தருபவரே, பாவிகளை மீட்டிட அரும்பாடுபட்டவரே, இவ்வுலக துன்பங்களுக்குப் பின் எங்களுக்கு முடிவில்லா பேரின்ப வாழ்வு தரவும் இக்கட்டுகள் நீங்கப் பெறவும் வேண்டும் வரங்கள் கிடைக்கவும், எங்கள் ஆண்டவரும் இறைவனின் திருமகனுமாகிய இயேசு கிறிஸ்துவிடம் எங்களுக்காக மன்றாடும். இயேசு கிறிஸ்துநாதர் வாக்குறுதிகளுக்கு நாங்கள் தகுதிபெறும்படியாக தூய அந்தோனியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

Tamil St Anthony Prayer


Shop Now: Bible, songs & etc 


1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!


2. Subscribe to Our Official YouTube Channel


Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!


Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."


We will be happy to hear your thoughts

      Leave a reply

      About Us

      gray-alpaca-115533.hostingersite.com is part of the Christianmedias organization. We share Tamil Christian songs with lyrics and worship music in multiple languages. Our mission is to inspire prayer and devotion by connecting believers with powerful songs and the stories behind them.

      WorldTamilchristians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo