
Tharunam Ithuvae kirubai Koorum – தருணம் இதுவே கிருபை கூரும்
Tharunam Ithuvae kirubai Koorum – தருணம் இதுவே கிருபை கூரும்
பல்லவி
தருணம் இதுவே, கிருபை கூரும்,
வழிபாரும், பதம் தாரும், தாரும்.
சரணங்கள்
1. கருணை தெய்வ குமாரா, கன மனுடவதாரா;
அருமை ரட்சக யேசு நாதா,-உல
கனைத்தும் வணங்கும் சத்ய வேதா,-உன்றன்
அடியர்க் கருளும் திருப் பாதா,-சத்ப்ர
சாதா, நீதா!- தருணம்
2. வானத்திலிருந்து வந்த ஞானத்தொளி சிறந்த
மகிமைப் பிரதாவின் திருப் பாலா,-ஆதி
மைந்தர்க் கிரங்கும் அனுகூலா,-கன
விந்தைக் கருணை மனுவேலா,-மெய்ந்
நூலா, சீலா! – தருணம்
3. அற்ப உலக வாழ்வில் அலைந்து, நிலை குலைந்து,
அலகைப்படு குழியில் வீழ்ந்து,-தாழ்ந்து,
அஞ்சி அஞ்சி நலிந் தேனே;-அடிமைக்
கஞ்சல் என்றுசொல்லும் கோனே,-சீ
மானே, தானே! – தருணம்
4. இந்த உலகத் தெமைச் சந்தித் தனுக்கிரகித்த
சொந்தக் கிருபைகள் மா காத்ரம்,-அவை
சிந்தித்து மடியாவிச் சேத்ரம்,-நிர்ப்
பந்த அடியர்கள் எம் மாத்ரம்!-பத
தோத்ரம்! தோத்ரம்! – தருணம்
Tharunam Ithuvae kirubai Koorum Lyrics in English
Tharunam Ithuvae kirubai Koorum
Vazhi Paarum Patham Thaarum Thaarum
1.Karunai Deiva Kumaara Kana Manudavathaara
Arumai Ratchaka Yesu Naatha
Ulakanaithum Vanangum Sathya Vedha Untran
Adiyarkalum Thirupaatha Sathpira
Satha Neetha
2.Vaanathilirunthu Vantha Gnana Thozhi Sirantha
Magimai Pirathavin Thiru Paala
Aathi Maintharkkirangum Anukoola
kana Vinthai Karunai Manuveala Mei
Noola Seela
3.Arpa Ulaga Vaazhvil Alainthu Nilai Kulanthu
Alagaipadu Kuliyil Veeznthu Thaazhnthu
Anji Anji Nalintheanae
Adimaikanjal Entru Sollum Koanae
Seemanae Thaane
4.Intha Ulagathemmai Santhithanukirakitha
Sontha Kirubaigal Maa kathram Avai
Sinthithu Madiyavi Seathram
Nirpantha Adiyargal Em Maathram
Pathathothiram Thothram