யெகோவா நிசி யேகோவா நிசியை – Yehova Nisi Yahova nisiyai
யெகோவா நிசி யேகோவா நிசியை – Yehova Nisi Yahova nisiyai song lyrics
யெகோவா நிசி யேகோவா நிசியை
போற்றிப் பாடுவோம்
எங்கள் கொடி வெற்றிக் கொடியே – அல்லேலூயா
சரணங்கள்
1. வீறு கொண்டெழுவீர் இயேசு வீரரே
மாறு கொண்டு மன்னர் முன்னே செல்கிறார்
சீறியெழும் சிங்கங்கள் நாம் அல்லவோ
மீறும் எதிரி சதிகளுக்கு மிரளவா?
யூத சிங்கம் யுத்த சிங்கமே – யேகோவா
2. கர்த்தர் துணை நின்று யுத்தம் செய்வாரே
கலங்கி நிற்க காரணங்கள் இல்லையே
கைகளைத் தளர்ந்திடாமல் தாங்கியே
கர்த்தர் இயேசு சத்திய ஆவி நிற்கிறார்
கர்த்தர் நல்ல யுத்த வீரரே – யேகோவா
3. எதிரி (சத்ரு) வெள்ளம் போல ஏறி வருகின்றான்
இயேசு ராஜா வேகம் கொடியை ஏற்றுவார்
கோலியாத்தின் வேஷமிங்கு செல்லுமா?
கோஷமிடும் இளைஞரின் முன் நில்லுமா?
கர்த்தர் நாமம் வல்ல நாமம் – யேகோவா
4. ஆவியில் நிறைந்த ஜெபம் செய்வோமே
ஆயுதங்கள் அணிந்து களம் செல்வோமே
ஆர்ப்பரித்து அலங்கமதை வீழ்த்தியே
ஆவிகளின் சேனைகளை வெல்வோமே
கொடிகள் ஏந்தும் படைகள் அல்லவோ – யேகோவா
5. நமக்கிருக்கும் இந்த பெலன் போதுமே
நாதன் இயேசு அனுப்புவதால் போவோமே
பட்டயமோ புயபலமோ தேவையா?
பரம தேவ ஆவி நம்மில் இல்லையா?
ஜீவ தேவ சேனை அல்லவோ? – யேகோவா
6. முடிந்தென்று முழங்கி நிற்கும்
வீரனே முற்றும் அவனை
முறியடித்து தீரனே
சிலுவையில் சிரம் நசித்த சீலனே
சிலுவைக்கொடியை ஏற்றும்
தேவபாலனே!
ரட்சிப்பென்ற தலைசீராவை
அணிந்தே-ஆஹா – யேகோவா நிசி
Yehovah Nissi song lyrics in english
Yehovah Nissi
- 1 2 3 4 அல்லேலுயா – 1 2 3 4 Alleluya
- 10 Paisavuku song lyrics – 10 பைசாவுக்கும்
- 8 languages sing As the Deer Together A worship in Heaven
- Aa Mesiyavae Vaarum Lyrics – ஆ மேசியாவே வாரும்
- Aa Inba Kaala Mallo Lyrics – ஆ இன்ப கால மல்லோ
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."